Friday 19 February 2016

முருங்கைக் காய் ரகசியம்



முருங்கைக் காய்  சத்துள்ள உணவு ஆகும் . இது உடல் வலிமையைக் கொடுக்ம் . இது உடல் சூட்டை அதிகரிக்கும் . இது சிறுநீரையும் தாதுவையும் அதிகரிக்கும் . கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவு

முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்தும்  பயன்படும்

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது இதன்  இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் வலுவாகும் . தோல் வியாதிகள் குறையும்

முருங்கை இலை காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடலாம் நல்ல பயன் கிடைக்கும்.


1 comment:

  1. முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் முருங்கைக் காய்

    ReplyDelete