Tuesday 16 February 2016

அகத்தி கீரை





1) அகத்தி கீரை குளிர்ச்சி தரும் குணமடையது. உடலில் உள்ள அனைத்து விதமான விஷங்களையும் முறியடிக்ககூடியது. மருந்துகளை உண்ணும் காலங்களில் அகத்திக்கீரையை உண்டால் மருந்தின் குணத்தை முறியடித்துவிடும் எனவே மருந்து உண்ணும் காலங்களில் அக்த்திக்கீரையை எடுத்துக்கொல்லாமல் இருப்பது நல்லது.

2) கத்தி கீரையை திணம் தோறும் உண்ணாமல் அடிக்கடி உண்பது நல்லது.

3) அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கரும்பட்டை,தேமல்,சொறி,சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.

4)  அகத்திக் கீரை சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.

5) உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்குமாம், ஜீரண சக்தியை அதிகரிக்குமாம். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும் குணமுடையதாம் நிறைய சாப்பிட்டால் வாயு பிரச்சனை உண்டாகுமாம்.

6) அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இள நரை ஏற்படுவதையும் தடுக்கும்.

7) அகத்திக் கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.

No comments:

Post a Comment