Showing posts with label pimples remedies. clear skin. Show all posts
Showing posts with label pimples remedies. clear skin. Show all posts

Monday, 28 March 2016

கோடை வெயிலை எதிர்க்கும் கடலை மாவு

                       
அழகின் முதல் எதிரி வெயில்! சருமம், கூந்தல் என உச்சி முதல் பாதம் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கற வெயிலை எப்படித்தான் எதிர் கொள்வது? வெயிலை பழிப்பதை தவிருங்கள். தினமும் சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறும், இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

     இந்த பிரச்சனைகளிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க ஓர் எளிய முறை தினமும் சருமத்திற்கு சோப்பை பயன்படுத்தாமல் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கடலை மாவைக் கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம். இதனால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

கடலை மாவின் நன்மைகள் :

     வெயிலால் நம் சருமம் எளிதில் கருமை ஆக கூடும் ,இதற்கு  சோப்பைக் கொண்டு கழுவினால் எந்த மாற்றமும் ஏற்படாது . அதற்கு பதிலாக கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.

  கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.

    பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணம் சரியான தூக்கம் இல்லாமையே , இதனை போக்க தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் போதும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.

    கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

    கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Thursday, 11 February 2016

10 குறிப்புக்கள் மேனி மினு மினுக்க



1. வறண்ட சருமம் உடையவர்கள் முகத்தில் ஆரஞ்சு பழம் தொடர்ந்து சாபிட்டு வரலாம்

2. வறண்ட சருமம் உடையவர்களுக்கு ஆரஞ்சு மற்றும் தேன் மிகசிறந்த நிவாரணி

3. ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பொடியாக்கி  அதனுடன் தண்ணீர் சேர்த்து முகம் , கை, கால் களில் தடவி வர வறண்ட சருமம் மறையும்

4. தண்ணீர் அதிக அளவில் பருக வேண்டும்

5. அரை முடி எலுமிச்சம் சாறு அதனுடன் 1 முடி சுடு தண்ணீர் கலந்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் விடில் பருகி வர தோல் மினு மினும்பு அடைவதோடு உடம்பில் உள்ள தேவை இல்லா சதைகள் குறையும்

6. தக்காளி பழ சாருடன் தயிர் கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவி வந்தால் தழும்புகள் மறையும்

7. எலுமிச்சை சாறினை பரு உள்ள இடத்தில தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவி வர பருக்கள் நீங்கும்

8. வாழை பழ தோலை அரைத்து சிறிது திருடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்

9. பப்பாளி பழத்தை பாலுடன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் முகம் பள பளபாகும்

10. மஞ்சளுடன் துளசி இலையை அரைத்து பூசி வந்தால் முகம் சொர சொரப்பு நீங்கும்

Tuesday, 9 February 2016

கடலை மாவும், முகப்பொலிவும்



கடலை மாவு பயன்படுத்தி சருமத்தை பொலிவுற செய்யலாம்

1. கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவைத்து அதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேருங்கள் பிறகு இதை முகத்தில் ‘பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

2. தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு ‘பேக்’ போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

3. இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

4. இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.