Wednesday 16 March 2016

கர்ப்பிணி பெண்களுக்கான எளிய மருத்துவம்

                                                          
                                                                                      

ஏழாவது மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் சாதம் கொதிப்பதில் முதல் கொதி வந்ததும் அந்த கொதிநீரை ஒரு டம்ளர் எடுத்து சிறிது பணங்கற்கண்டு  சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும். சிறிது வெந்தயம் சிறிது பச்சரிசி 5 பல் பூண்டு மூன்றையும் குழைய வேகவைத்து கடைந்து  குடிக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு டம்ளர் மாதுளம் பழம் சாறு  குடிக்கலாம். இதனால்  தாய், சேய் இருவருக்கும் மிகவும் சிறந்தது ,இரத்தம்  விருத்தியாகும்.

பாலுடன் பூண்டை  சேர்த்து  நன்கு வேகவைத்து கடைந்து இரவில் சாப்பிட்டு வரலாம்.

கர்ப்பிணி பெண்கள் இரவு  படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரை இடுப்பு மற்றும் கால்களுக்கு ஊற்றி கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் சோம்பை சிறிது வறுத்து  தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ள பால் ,பழங்கள், காய்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை அதிகளவில் சேர்க்க  வேண்டும்.

No comments:

Post a Comment